கீரை வகைகள்

Keerai Vagaigal

Keerai Vagaigal

கீரை வகைகள்:

கீரைகள் தாவரவியல் ரீதியாக லாக்டுகா இனத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கீரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித உணவில் பிரதானமாக உள்ளது. பல்வேறு கீரை வகைகள் உள்ளன. ஒவ்வொறு கீரையும் தனித்துவமான சுவையையும், நம் உடலுக்கு நன்மைகளையும் தருகின்றன. கீரைகளில் பைட்டோகெமிக்கல்ஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் மற்றும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்த கீரைகள் பாரம்பரியமாக இந்தியாவில் மற்றும் அனைத்து நாடுகளிலும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், உணவிலும் பயன்படுத்தப்படுகிறது.

கீரைகளின் வகைகள்:

கீரை வகைகள் நமது தினசரி உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய உணவாகும். கீரைகள் நமக்கு தேவையான அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதால் நமது உடல்நலத்திற்கு உகந்ததாகும். கீரைகள் சுவையானவை மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானவை என்பதனை மறவாமல் அவற்றை நாம் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை வகைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட சுவை உண்டு. அதே போன்று கீரை வகைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட மருத்துவ குணங்களும் மற்றும் நன்மைகளும் உண்டு. நமக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கீரைகளை நம் அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரைகளின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் :

ஊட்டச்சத்துக்கள்:

கீரைகள் பலவிதமான முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. கீரைகளின் வகையைப் பொறுத்து வைட்டமின் A, B, C, K, இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. கீரையின் ஊட்டச்சத்து மதிப்பு நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ஒரு தீர்வாக அமைகிறது.

நாம் பயன்படுத்தும் கீரைகளின் வகைகளுக்கேற்ப பயன்கள் மாறுபடுகின்றன:

  • முதன்மையாக, கீரைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டியோக்ஸிடண்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.
  • சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.
  • அதிகளவு நார்ச்சத்து (fiber) கீரைகளில் உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துவதிலும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குறைகின்றன.
  • கீரைகள் இரத்த சோகைக்கு சிறந்த உணவாகும். இதில் உள்ள இரும்புச்சத்து (iron) மற்றும் ஃபோலிக் ஆசிட் இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கின்றன.
  • கீரைகளில் உள்ள வைட்டமின் கே (vitamin K) இரத்த உறைவு சீராக வைத்திருக்கும்.
  • கீரைகள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புத் தாதுக்கள் மற்றும் ஆன்டியோக்ஸிடண்டுகள் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.

கீரைகளை எப்படிப் பயன்படுத்துவது?

கீரைகளை தினசரி உணவில் பயன்படுத்துவது மருத்துவ ரீதியாக பல நன்மைகளைத் தருகிறது. கீரைகளை குழம்பு, பொரியல், கூட்டு, சட்னி, மற்றும் சூப் என பல வகைகளில் பயன்படுத்தலாம். கீரைகளை சமைக்கும் முன் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகே சமைக்கவேண்டும். கீரைகளை சமைக்கும் போது அதிகமாக வேக வைக்கக்கூடாது. இதனால் கீரையின் சத்துக்கள் குறைந்துவிடும். குறைந்த தீயில் மெதுவாக சமைப்பது அல்லது ஆவியில் வேகவைத்தல் கீரைகளின் சத்துக்களை முழுமையாக பாதுகாக்க உதவும். அதேபோல் கீரைகளை 4 டிகிரி செல்சியஸ் முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். ப்ரீசரில் வைக்ககூடாது.

Visit BlogAdda.com to discover Indian blogs