தோல் மருத்துவர்கள் (Dermatologist) என்பவர் 3,000 க்கும் மேற்பட்ட தோல் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பவர். பொதுவாக தோல், முடி மற்றும் நகங்களின் நிலைகளைக் கண்டறிந்து அவற்றிற்கு சிகிச்சையளிப்பவர். தோல் மருத்துவர் தோல் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதுடன் மட்டுமல்லாமல் முகப்பரு வடுக்கள், சுருக்கங்கள் மற்றும் பிற அழகியல் சார்ந்த தோல் மருத்துவத்திலும் ஈடுபடுகிறார்கள்.
தோல் புற்றுநோய்கள் மற்றும் பிற தீவிர தோல் நிலைகளைக் கண்டறிவதும் தோல் மருத்துவர்களின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். தோல் நோய்களை முன் கூட்டியே கண்டறிதல், தோல் அமைப்பு, நிறம் மற்றும் வடிவம் போன்ற நுட்பமான மாற்றங்களைக் கண்டறிவதில் தோல் மருத்துவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து தங்கள் சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து தோல் மருத்துவர்கள் நோயாளிகளுக்குக் கற்பிக்கின்றனர்.
தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சரியான தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பதில் தோல் மருத்துவர்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.