Psychiatry Meaning In Tamil
மனநல மருத்துவம் என்றால் என்ன?
மனநல மருத்துவம் (Psychiatry) என்பது மருத்துவத்தின் ஒரு முக்கிய பிரிவாகும், இது மனம், உணர்ச்சி மற்றும் நடத்தை கோளாறுகளைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மருத்துவத்துறையாகும்.
மனநல மருத்துவம் முகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மனநலக் குறைபாடுகள் மனித வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. மனநலம் பாதிப்புகள் மனநிலையை மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியவை. இந்த பாதிப்புகளை மனநல மருத்துவம் சரி செய்யுப் பயன்படுகிறது. மனநலக் குறைபாடுகளை அடையாளம் காண்பதன் மூலம் அதற்குரிய சிகிச்சை அளித்து, நிவாரணம் அளிக்க முடியும்.
மனநல மருத்துவத்தின் பயன்கள்:
- மனநல மருத்துவர் மற்றும் நோயாளிகளுக்கு இடையே சிறந்த தொடர்பு ஏற்படுகிறது. இது மனநல பிரச்சினைகளை அடையாளம் காணவும், அவற்றுக்கு சரியான தீர்வுகளை பெறவும் உதவுகிறது.
- மனநல குறைபாடுகளின் காரணமாக ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சல்களை குறைகிறது.
- வேலைத்திறன் சமூக உறவுகள் மற்றும் வாழ்க்கை தரம் மேம்படுகிறது
- மனநல மருத்துவம், மனஅழுத்தம், கவலை, மற்றும் மனச்சோர்வு போன்றவற்றை தீர்க்க உதவுகிறது.
- மனநல மருத்துவ சிகிச்சைகளின் மூலம் நோயாளிகள் தங்கள் மனநிலையை கட்டுப்படுத்தவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இதனால் வாழ்வில் தன்னம்பிக்கையை பெற்று செயல்பட முடிகிறது.