ஹைபோக்ஸியா என்பது உடலில் உள்ள திசுக்களை அடையும் ஆக்ஸிஜனின் அளவு குறைவதால் வகைப்படுத்தப்படும் ஒரு மருத்துவ நிலையாகும். திசுக்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஏற்படுத்தும். உதாரணமாக நுரையீரல் நோய்கள், இதய நோய்கள், மூச்சுத் திணறல், குழப்பம், மற்றும் விரைவான இதயத் துடிப்பு போன்றவை ஹைபோக்ஸியாவின் அறிகுறிகளாகும்..
பொதுவாக ஹைபோக்ஸியா ஏற்படக் காரணங்களில் ஒன்று ஆஸ்துமா மற்றும் COBD எனப்படும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயாகும். COBD உள்ள நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாமல் போகிறது. இந்த நிலை ஹைபோக்ஸியாவுக்கு ஏற்பட வழிவகுக்கிறது. ஹைபோக்ஸியாவின் ஏற்பட மற்றொரு பொதுவான காரணம் இதய செயலிழப்பாகும் (Heart Failure). இதய செயலிழப்பால் உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்க இதயத்தால் போதுமான அளவு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாது எனவே இதய நோய் அல்லது பிற நிலைமைகளின் விளைவாக ஹைபோக்ஸியா ஏற்படலாம்
பொதுவாக ஹைபோக்ஸிவுக்கு சிகிச்சையானது இரத்தத்தில் கூடுதல் ஆக்ஸிஜனை அளிப்பதாகும். ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க பொதுவாக Oxygen Mask அல்லது Nasal Cannulas வழியாக ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் Mechanical Ventilation தேவைப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு நுரையீரல் அல்லது இதய செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட மருந்துகள் அல்லது கூடுதல் மருத்துவ தலையீடுகள் தேவைப்படலாம். நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதன் மூலம் ஹைபோக்ஸியா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்கள்களின் அபாயத்தை குறைக்கலாம்.