மருத்துவத் துறையில் சிறுநீரக மருத்துவர் (Urologist) என்பவர் சிறுநீர்ப் பாதை மற்றும் ஆண் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஆவார். இந்தத் துறையில் சிறுநீர் அடங்காமல் இருத்தல், சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் முதல் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சினைகள் வரை பலவிதமான நோய் நிலைமைகளை உள்ளடக்கிய மருதுத்துவத் துறையாகும்.
பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற தொடர்ச்சியான அறிகுறிகள் ஏற்படும் போதும். விறைப்புத்தன்மை அல்லது டெஸ்டிகுலர் வலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்போதும் ஆண்கள் சிறுநீரக மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது முக்கியம்.